WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

STATE BANK OF INDIA NELLIKUPPAM Branch Contact Information

STATE BANK OF INDIA   NELLIKUPPAM  Branch Contact Information
COUNTRY : India
STATE : Tamil Nadu
BRANCHES/OFFICES : NELLIKUPPAM
BRANCH CODE : 4765
ADDRESS : THE BRANCH MANAGER, STATE BANK OF INDIA, 347-B, MAIN ROAD, NELLIKUPPAM, PANRUTI TALUK
E-MAIL ADDRESS : sbi.04765@sbi.co.in
MOBILE NUMBER : 9894604278
STD CODE : 4142
CONTACT NUMBERS : 272292
STATE BANK OF INDIA   NELLIKUPPAM  Branch Contact Information. The branch located in: NELLIKUPPAM   and contact address is:: THE BRANCH MANAGER, STATE BANK OF INDIA, 347-B, MAIN ROAD, NELLIKUPPAM, PANRUTI TALUK  and e-mail id :: sbi.04765@sbi.co.in phone number: 9894604278: 272292

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்




நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்! நோய் நம்மைத் தாக்காதவண்ணம், உடலில் எதிர்ப்புசக்தியை வளர்க்கும் திறனும் நெல்லிக்காய்க்கு உண்டு. உலர்ந்த நெல்லிக்காய்ப் பொடி வயிற்றில் உள்ள புண்கள், ஹைபர் அசிடிடி மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க வல்லது. உடல் பலகீனம், இருதயம், மூளையில் சோர்வு ஏற்பட்டால் உணவுக்கு இடையே நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை ஊறவைத்த நீரால் கண்களைக் கழுவுவதாலும் ஊறவைத்த நீரைக் காலையில் பருகுவதாலும், கண் பார்வை தீர்க்கமடையும். மலச்சிக்கலும் நீங்கும். நெல்லிக்காய் தைலத்தை தலையில் தேய்த்தால், முடி நன்கு வளரும். இளநரை கட்டுப்படும். நல்ல தூக்கம் வரும். மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தால் ஒவ்வொரு நாசித்துளையிலும் இரண்டு மூன்று சொட்டு நெல்லிக்காயின் ஜூஸைவிட்டால், கசியும் ரத்தம் நின்றுவிடும். நெல்லிக்காய் நம் உடலில் ஏற்படும் பலவித உபாதைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் கட்டுப்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கத்தை நீக்கும். ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தச் சோகையை நீக்கி, சிவப்பணுக்களை அதிகரிக்கும். இருமல், ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் நோய்களை நீக்கும். வாய் துர்நாற்றத்தை தடுத்து, பற்களை உறுதியாக்கும்!

Read more at : நெல்லிக்கனி அள்ளித் தரும் ஆரோக்கியங்கள்! http://tamilblog.ishafoundation.org/nellikkani-allitharum-arogyangal/

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்! 



நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி கொண்டதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளது. இன்று ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நெல்லிக்காய், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மருத்துவ ரிஷிகளான சரகராலும் சுஸ்ருதராலும் தமது மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது. நம் உடலுக்குள் உணவு மூலமாகச் செல்லும் கொழுப்புச் சத்தில் தேவையான அளவு ஈர்த்துக்கொள்ளப்பட்டு, மீதம் உள்ளவை உடலில் கொழுப்பாகச் சேர்ந்து விடுகிறது. ரத்தக் குழாயில் தேங்கும் இந்தக் கொழுப்பினால் இருதயப் பாதிப்பு ஏற்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இந்தக் கொழுப்பினைக் கரைத்து, உடலின் ரத்த அழுத்தத்தையும் குறைத்துக் குணப்படுத்துகிறது.

Read more at : நெல்லிக்கனி அள்ளித் தரும் ஆரோக்கியங்கள்! http://tamilblog.ishafoundation.org/nellikkani-allitharum-arogyangal/

கொலஸ்ட்ரால் கட்டுப்பட…

கொலஸ்ட்ரால் கட்டுப்பட… 





உலர்ந்த நெல்லிக்காயைப் பொடி செய்து சர்க்கரைப் பொடியுடன் கலந்து கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு பொடியை ஒரு தம்ளர் நீரில் கரைத்து அருந்தினால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். நெல்லிக்காய், பலவிதமாக, பல நிறங்களில் அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், இளஞ்சிவப்பு நிற அரை நெல்லிக்காய் என்று கிடைக்கும். அதில் உள்ள கசப்புத்தன்மை மாறுபடும். சற்றே புளிப்பும் இனிப்புமாக உள்ள அரை நெல்லிக்காய், சாலட்களில் சேர்க்கப்பட்டு சாப்பிடப்படுகின்றன. அதிக இனிப்பாக உள்ள பழங்கள் ஃப்ரூட் சாலட் செய்வதில் சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காயை முள்கரண்டியால் ஆங்காங்கே குத்திய பிறகு, சர்க்கரைப்பாகில் கொதிக்கவைத்துச் சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்!

Read more at : நெல்லிக்கனி அள்ளித் தரும் ஆரோக்கியங்கள்! http://tamilblog.ishafoundation.org/nellikkani-allitharum-arogyangal/

பேரிச்சையில் உள்ள சத்துக்கள்

பேரிச்சையில் உள்ள சத்துக்கள் 




இன்றைய விஞ்ஞான முடிவுகளின்படி பேரீச்சை மிக ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. இதில் சர்க்கரை, கொழுப்பு, புரதம் மற்றும் முக்கிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன. பரீச்சம்பழம், நார்ச்சத்து நிறைந்த ஒரு பழம். நவீன மருத்துவத்தின்படி வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை பேரீச்சம்பழம் தடுக்க வல்லது. மேற்கூறிய பொருட்களைத் தவிர, பேரீச்சையில் எண்ணெய்ச் சத்து, கால்சியம், சல்ஃபர், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், செப்பு, மேங்கனிசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருட்கள் உள்ளன. அரேபிய மக்கள், பேரீச்சையில் பால், தயிர், பிரெட், வெண்ணெய் மற்றும் மீனுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இந்த கலவையினால் சுவை கிடைப்பதோடு உடலுக்கும் மனதுக்கும் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்கின்றன. விரதத்தை பேரீச்சம்பழம் சாப்பிட்டு முடிக்கச் சொல்வது ஏன்? விரதமிருக்கும்போது, வயிற்றில் பசி அதிகமாக ஏற்பட்டிருக்கும். பசி எப்போது ஏற்படுகிறது? உடலில் சர்க்கரை அளவு குறையும்போது பசி உண்டாகிறது. அந்தச் சமயத்தில் ஒரு பேரீச்சை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை உடல் ஏற்று, அதீதமான பசியைக் குறைக்கும். இதனால் விரதம் முடிந்தபின் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட முடியாது.

Read more at : பேரீச்சம்பழங்கள் – பெண்களுக்கும், நம் கண்களுக்கும்! http://tamilblog.ishafoundation.org/paereechampazhangal-pengalukkum-nam-kangalukkum/

பேரீச்சம்பழங்கள் - யாருக்கெல்லாம் இது மருந்து


பேரீச்சம்பழங்கள் - யாருக்கெல்லாம் இது மருந்து


யாருக்கெல்லாம் இது மருந்து? பேரீச்சம்பழம் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு கை கண்ட மருந்தாகும். முதல் நாள் இரவே சிறிதளவு நீரில் ஊறவைத்து மறுநாள் அரைத்துச் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை அறவே நீக்கும். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. அவர்கள் குடிக்கும் நீரில் பேரீச்சம் பழத்தை ஊறப்போட்டுவிட்டால் மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள். இருதயம் வலுவிழந்திருப்போர் வாரம் இருமுறை இரவே தண்ணிரில் பேரீச்சையை ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அதனை கசக்கிப் பிழிந்து ஊறவைத்த நீரோடு சேர்த்துச் சாப்பிட, இருதயம் வலுவடையும். பேரீச்சம்பழம் இத்தனை நற்குணங்களைப் பெற்றிருப்பதோடு மலிவாகக் கிடைக்கும் ஒரு பழமும்கூட. அதனைச் சுத்தப்படுத்தி, நல்ல முறையில் விற்பனை செய்பவர்களிடம் வாங்கிச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இந்தப் பழத்துக்கு இயல்பாக உள்ள பிசுபிசுப்புத் தன்மையினால் காற்றில் உள்ள மாசினையும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளும் குணம் கொண்டது. எனவே, தரமான பேரிச்சைதானா எனப் பார்த்து வாங்குங்கள்… பயனடையுங்கள்!

Read more at : பேரீச்சம்பழங்கள் – பெண்களுக்கும், நம் கண்களுக்கும்! http://tamilblog.ishafoundation.org/paereechampazhangal-pengalukkum-nam-kangalukkum/

பேரிச்சையில் உள்ள மருத்துவ குணம்

பேரிச்சையில் உள்ள மருத்துவ குணம்



மருத்துவ குணம் பேரீச்சம்பழத்துக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் உண்டு. கருவைச் சுமந்திருக்கும் பெண்ணின் கருப்பை தசைகளை உறுதிபடச் செய்யும் சக்தி பேரீச்சைக்கு உண்டு. இதனைக் கர்ப்பிணிகள் பேறு காலத்தில் சாப்பிட்டு வந்தால், பிரசவத்தின்போது தசைகள் எளிதில் தளர்ந்து கொடுக்கும். பிள்ளை பிறந்த பிறகும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு ஏற்றதாகும். குழந்தை பிறந்த பிறகு சில தாய்மார்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். அதை நீக்கவல்லது பேரீச்சை. அதோடு இந்த பழத்தைச் சாப்பிட்டு தாய்ப்பால் அளித்தால், குழந்தைகள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்று வளர்வார்கள். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. குழந்தைகளுக்கு எலும்பில் வலு இல்லாதபோது, ரிக்கெட்ஸ் என்ற நோய் ஏற்படும். பெரியவர்களுக்கு எலும்பில் வலு குறையும்போது, ஆஸ்டியோபொரோஸிஸ் ஏற்படும். உடலில் கால்சியம் அளவு குறைவதே இதற்குக் காரணம். பேரீச்சையில் கால்சியம் இருப்பதால், இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். பேரீச்சம்பழம் நம் கண்கள் பராமரிப்பிலும் உதவுகிறது. மாலைக் கண் நோய் வருவதை இதைச் சாப்பிடுவதால் தடுக்க முடியும். நம் உடலில் உள்ள தசைகள் உறுதி பெறவும் பேரீச்சை உதவுகிறது. இதனால்தான் இஸ்லாமிய போர் வீரர்கள், யுத்த காலங்களில் பைகளில் பேரீச்சம் பழம் நிரப்பிச் செல்வார்கள். பேரீச்சம்பழம் உடலுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். எளிதில் ஜீரணமடைந்து உடலில் ஏற்பட்டுள்ள சோர்வை நீக்கி, உடலுக்குத் தெம்பை அளிக்கவும் உதவுகிறது. உடல்நலம் குன்றிப்போனவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற பாலில் பேரீச்சம்பழம் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் நிறைய ஏற்படும். இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவை.

Read more at : பேரீச்சம்பழங்கள் – பெண்களுக்கும், நம் கண்களுக்கும்! http://tamilblog.ishafoundation.org/paereechampazhangal-pengalukkum-nam-kangalukkum/