பேரீச்சம்பழங்கள் - யாருக்கெல்லாம் இது மருந்து
யாருக்கெல்லாம் இது மருந்து? பேரீச்சம்பழம் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு கை கண்ட மருந்தாகும். முதல் நாள் இரவே சிறிதளவு நீரில் ஊறவைத்து மறுநாள் அரைத்துச் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை அறவே நீக்கும். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. அவர்கள் குடிக்கும் நீரில் பேரீச்சம் பழத்தை ஊறப்போட்டுவிட்டால் மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள். இருதயம் வலுவிழந்திருப்போர் வாரம் இருமுறை இரவே தண்ணிரில் பேரீச்சையை ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அதனை கசக்கிப் பிழிந்து ஊறவைத்த நீரோடு சேர்த்துச் சாப்பிட, இருதயம் வலுவடையும். பேரீச்சம்பழம் இத்தனை நற்குணங்களைப் பெற்றிருப்பதோடு மலிவாகக் கிடைக்கும் ஒரு பழமும்கூட. அதனைச் சுத்தப்படுத்தி, நல்ல முறையில் விற்பனை செய்பவர்களிடம் வாங்கிச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இந்தப் பழத்துக்கு இயல்பாக உள்ள பிசுபிசுப்புத் தன்மையினால் காற்றில் உள்ள மாசினையும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளும் குணம் கொண்டது. எனவே, தரமான பேரிச்சைதானா எனப் பார்த்து வாங்குங்கள்… பயனடையுங்கள்!
Read more at : பேரீச்சம்பழங்கள் – பெண்களுக்கும், நம் கண்களுக்கும்! http://tamilblog.ishafoundation.org/paereechampazhangal-pengalukkum-nam-kangalukkum/