WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

பேரிச்சையில் உள்ள மருத்துவ குணம்

பேரிச்சையில் உள்ள மருத்துவ குணம்



மருத்துவ குணம் பேரீச்சம்பழத்துக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் உண்டு. கருவைச் சுமந்திருக்கும் பெண்ணின் கருப்பை தசைகளை உறுதிபடச் செய்யும் சக்தி பேரீச்சைக்கு உண்டு. இதனைக் கர்ப்பிணிகள் பேறு காலத்தில் சாப்பிட்டு வந்தால், பிரசவத்தின்போது தசைகள் எளிதில் தளர்ந்து கொடுக்கும். பிள்ளை பிறந்த பிறகும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு ஏற்றதாகும். குழந்தை பிறந்த பிறகு சில தாய்மார்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். அதை நீக்கவல்லது பேரீச்சை. அதோடு இந்த பழத்தைச் சாப்பிட்டு தாய்ப்பால் அளித்தால், குழந்தைகள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்று வளர்வார்கள். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. குழந்தைகளுக்கு எலும்பில் வலு இல்லாதபோது, ரிக்கெட்ஸ் என்ற நோய் ஏற்படும். பெரியவர்களுக்கு எலும்பில் வலு குறையும்போது, ஆஸ்டியோபொரோஸிஸ் ஏற்படும். உடலில் கால்சியம் அளவு குறைவதே இதற்குக் காரணம். பேரீச்சையில் கால்சியம் இருப்பதால், இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். பேரீச்சம்பழம் நம் கண்கள் பராமரிப்பிலும் உதவுகிறது. மாலைக் கண் நோய் வருவதை இதைச் சாப்பிடுவதால் தடுக்க முடியும். நம் உடலில் உள்ள தசைகள் உறுதி பெறவும் பேரீச்சை உதவுகிறது. இதனால்தான் இஸ்லாமிய போர் வீரர்கள், யுத்த காலங்களில் பைகளில் பேரீச்சம் பழம் நிரப்பிச் செல்வார்கள். பேரீச்சம்பழம் உடலுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். எளிதில் ஜீரணமடைந்து உடலில் ஏற்பட்டுள்ள சோர்வை நீக்கி, உடலுக்குத் தெம்பை அளிக்கவும் உதவுகிறது. உடல்நலம் குன்றிப்போனவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற பாலில் பேரீச்சம்பழம் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் நிறைய ஏற்படும். இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவை.

Read more at : பேரீச்சம்பழங்கள் – பெண்களுக்கும், நம் கண்களுக்கும்! http://tamilblog.ishafoundation.org/paereechampazhangal-pengalukkum-nam-kangalukkum/