WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்

நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்! 



நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி கொண்டதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளது. இன்று ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் நெல்லிக்காய், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் மருத்துவ ரிஷிகளான சரகராலும் சுஸ்ருதராலும் தமது மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது. நம் உடலுக்குள் உணவு மூலமாகச் செல்லும் கொழுப்புச் சத்தில் தேவையான அளவு ஈர்த்துக்கொள்ளப்பட்டு, மீதம் உள்ளவை உடலில் கொழுப்பாகச் சேர்ந்து விடுகிறது. ரத்தக் குழாயில் தேங்கும் இந்தக் கொழுப்பினால் இருதயப் பாதிப்பு ஏற்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இந்தக் கொழுப்பினைக் கரைத்து, உடலின் ரத்த அழுத்தத்தையும் குறைத்துக் குணப்படுத்துகிறது.

Read more at : நெல்லிக்கனி அள்ளித் தரும் ஆரோக்கியங்கள்! http://tamilblog.ishafoundation.org/nellikkani-allitharum-arogyangal/