WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

மருதாணி இலையின் மகத்தான பயன்கள்

மருதாணி இலையின் மகத்தான பயன்கள்



மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. மருதாணியை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டல் கைக்கு அலங்கரிக்க என்று தான்  பல பெண்களும் ஒரே மாதிரி சொல்வார்கள். மருதாணியை பொதுவாக ஹென்னா அல்லது மெஹந்தி என்று நம் நாட்டில் அழைப்போம். இது  அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது அதனை கொண்டு கைகளில் அழகிய  டிசைன்களை வரையலாம். மிகவும் புனிதமானதாகவும், சமயப்பற்றானதாகவும் கருதப்படும் மருதாணி பெண்களின் 7 ஸ்ரிங்காரத்தில் முக்கியமான  ஒன்றாக நிகழ்கிறது.

மருதாணி பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அதனை தடவினால் பொருட்களை சிகப்பு அல்லது பழுப்பு நிறத்தில் மாற்ற கூடிய தன்மையை  கொண்டுள்ளது. அதனால் நரைத்த முடியை கலரிங் செய்வதற்காகவும் இதனை ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகின்றனர். இது போக இதில்  பல உடல்நல நன்மைகளும் அடங்கியுள்ளது. மருதாணி இலைகள் மிகவும் பயனுள்ளதாக வி ளங்குகிறது. அந்த இலைகளை பொடியாக்கி, அல்லது  பேஸ்டாக்கி அல்லது இலை வடிவத்திலேயே பல காரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி அது எதற்கு உபயோகப்படுகிறது என்பதை  தெரிந்து கொள்வோம்.

குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை :

மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழற்சி நீக்கி பொருளாகவும்  பயன்படுத்தலாம். அதன் இலைகளை பேஸ்ட்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அதனை காயவிட்டால் வீக்கம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்.  இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்ட்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

தலை முடி :

அனைத்து வகை தலைமுடி பிரச்னைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதாணி இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை  இந்த பேஸ்ட்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை  மறைப்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

தீக்காயம் :

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். ஏற்கனவே சொன்னதை போல மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது.  அதனால் மருதாணி இலைகளை தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி  இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

வலி நிவாரணி :

குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மையுள்ள மருதாணியை தலை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர்  அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும். அதனை சீராக பயன்படுத்தினால் மைக்ரைன்  பிரச்னைக்கும் நிவாரணியாக விளங்கும்.

கல்லீரல் பாதுகாப்பு :

மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் பிரச்னைகளை குணப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. மஞ்சாள் காமாலை என்பது ஆபத்தான  காய்ச்சலாகும். சில நேரம் அதற்கான சிகிச்சையும் சிக்கலாகி விடும். அதனால் மஞ்சள் காமாலையை குணப்படுத்த நல்ல ஆயுர்வேத மருந்தாக  மருதாணியை எடுத்து கொள்ளலாம்.

visit