ஆவின் பால் கலப்பட விவகாரம்: வைத்தியநாதன் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னையில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதனுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனு செய்திருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வைத்தியநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவின்பால் கலப்பட வழக்கில் 10 வது குற்றவாளியாக வைத்தியநாதன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதித்திட்டார். இதற்கு அரசு தரப்பு மற்றும் சிபிஐ தரப்பிலான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வைத்தியநாதனை வெளியில் விட்டால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குமார், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைத்தார். தற்போது வைத்தியநாதன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.