ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல்?
சொத்துக்குவிப்பு வழக்கில், ஜாமின் கேட்டு ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நாளை மனுதாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. அதேநேரத்தில், தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், தண்டனையை நிறுத்திவைத்து ஜாமின் வழங்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில், உச்சநீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பிலும் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா உட்பட 4 பேரும், கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.