WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்




நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்! நோய் நம்மைத் தாக்காதவண்ணம், உடலில் எதிர்ப்புசக்தியை வளர்க்கும் திறனும் நெல்லிக்காய்க்கு உண்டு. உலர்ந்த நெல்லிக்காய்ப் பொடி வயிற்றில் உள்ள புண்கள், ஹைபர் அசிடிடி மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க வல்லது. உடல் பலகீனம், இருதயம், மூளையில் சோர்வு ஏற்பட்டால் உணவுக்கு இடையே நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை ஊறவைத்த நீரால் கண்களைக் கழுவுவதாலும் ஊறவைத்த நீரைக் காலையில் பருகுவதாலும், கண் பார்வை தீர்க்கமடையும். மலச்சிக்கலும் நீங்கும். நெல்லிக்காய் தைலத்தை தலையில் தேய்த்தால், முடி நன்கு வளரும். இளநரை கட்டுப்படும். நல்ல தூக்கம் வரும். மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தால் ஒவ்வொரு நாசித்துளையிலும் இரண்டு மூன்று சொட்டு நெல்லிக்காயின் ஜூஸைவிட்டால், கசியும் ரத்தம் நின்றுவிடும். நெல்லிக்காய் நம் உடலில் ஏற்படும் பலவித உபாதைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் கட்டுப்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கத்தை நீக்கும். ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தச் சோகையை நீக்கி, சிவப்பணுக்களை அதிகரிக்கும். இருமல், ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் நோய்களை நீக்கும். வாய் துர்நாற்றத்தை தடுத்து, பற்களை உறுதியாக்கும்!

Read more at : நெல்லிக்கனி அள்ளித் தரும் ஆரோக்கியங்கள்! http://tamilblog.ishafoundation.org/nellikkani-allitharum-arogyangal/