WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வுக்கு அழைப்பு

இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர்வதற்காக நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2013 தேர்வு எழுத பிளஸ் 2 படித்த அறிவியல் குருப் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2014.
மொத்த காலியிடங்கள்: 42.
வயது: 1.1.2014 அன்று 17 லிருந்து 21க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1993க்கு முன்பாகவோ 1.1.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.
கல்வித்தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதல் அல்லது 2ம் வகுப்பில் பிளஸ் 2 முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பிஎஸ்சி முதல் அல்லது இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அதன் துணை வங்கிகளிலோ நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.
எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை ஆகிய ஊர்களில் 12.1.2014ல் நடைபெறும்.
பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பி.இ., (மெக்கானிக்கல்) பட்டம் பிர்லா இன்ஸ்ட்டி டியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ராவால் (ராஞ்சி) வழங்கப்படும். பயிற்சியின் போது முதல் 2 வருடங்கள் மாதம் ரூ.9,100 உத வித்தொகையும், மூன்றாம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டில் முதல் 6 மாதங்கள் மாதம் ரூ.9,400 உதவித்தொகையும், கடைசி 6 மாதங்கள் ரூ.9,700 உதவித் தொகையும் வழங்கப்படும். 4 வருட பயிற்சிக்குப்பின் ரயில்வேயில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியில் அமர்த்தப்படுவார்கள். 
கூடுதல் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.11.2013.